follow the truth

follow the truth

September, 8, 2024
Homeஉள்நாடுமலிவான விலையில் எரிவாயுவை இறக்குமதி செய்யும் ஒப்பந்தம் அடுத்தவாரம் கைச்சாத்து

மலிவான விலையில் எரிவாயுவை இறக்குமதி செய்யும் ஒப்பந்தம் அடுத்தவாரம் கைச்சாத்து

Published on

நாட்டுக்கு மலிவான விலையில் எரிவாயுவை இறக்குமதி செய்வதற்காக தாய்லாந்தின் சியாம் நிறுவனத்துடன் எதிர்வரும் வாரத்தில் ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

தாய்லாந்து நிறுவனத்திடம் இருந்து எரிவாயுவை இறக்குமதி செய்வதற்காக அடுத்த வாரத்திற்குள் அமைச்சரவை அனுமதி கிடைக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த மாதம் முதல் எதிர்வரும் 2 வருடங்களுக்கு நாட்டுக்கு எரிவாயுவை இறக்குமதி செய்வதற்கு கேள்வி மனுவின் ஊடாக குறித்த தாய்லாந்து நிறுவனம் தெரிவு செய்யப்பட்டது.

கடந்த 2 இரண்டு ஆண்டுகளில், எரிவாயுவை இறக்குமதி செய்யும் நிறுவனம், மெட்ரிக் டொன் ஒன்றுக்கு அறிவிட்ட தொகையை விடவும் 9 டொலர் குறைவாக, புதிய நிறுவனத்திடமிருந்து எரிவாயுவை பெற்றுக் கொள்ள முடியும் என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக, ஓமானில் இருந்து நாட்டுக்கு எரிவாயு இறக்குமதி செய்யப்பட்டது.

எனினும், குறித்த நிறுவனத்துடனான ஒப்பந்தம் கடந்த மாதத்துடன் நிறைவடைகிறது.

இதேவேளை ஓமான் நிறுவனத்துடன் ஏற்படுத்தி கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தத்திற்கு அமைய குறித்த நிறுவனத்தினால் அனுப்பப்பட்ட 3,500 மெட்ரிக் டொன் எரிவாயு அடங்கிய கப்பல் நேற்றுமுன்தினம் நாட்டை வந்தடைந்தது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

செப்டம்பர் 05 நாட்களில் மாத்திரம் 21,073 சுற்றுலாப் பயணிகள் வருகை

செப்டம்பர் மாதத்தின் கடந்த ஐந்து நாட்களில் மாத்திரம் 21,073 பேர் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார...

இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை நீக்கிய தன்சானியா

20 ஆண்டுகளுக்கும் மேலாக விதிக்கப்பட்டிருந்த இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை தன்சானியா நீக்க தீர்மானித்துள்ளது. தன்சானியாவின் விசா பரிந்துரை பட்டியலில் இலங்கை...

தபால்மூல வாக்குச் சீட்டின் புகைப்படத்தை வெளியிட்ட நபர் தொடர்பில் விசாரணை

தபால் மூல வாக்கு சீட்டினை சமூக ஊடகங்களில் வெளியிட்டதாகக் கூறப்படும் சந்தேக நபரை விசாரணை செய்யுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு...