follow the truth

follow the truth

September, 12, 2024
Homeஉள்நாடுஇரசாயன உரங்களை இறக்குமதி செய்ய விதித்த தடை காரணமாக நீதிமன்றத்தில் மனு தாக்கல்

இரசாயன உரங்களை இறக்குமதி செய்ய விதித்த தடை காரணமாக நீதிமன்றத்தில் மனு தாக்கல்

Published on

இரசாயன உர இறக்குமதிக்கு ஆய்வு ஏதுமின்றி தடை விதித்த ஜனாதிபதியின் முடிவால் விவசாயிகளுக்கும், நாட்டின் விவசாயத் துறைக்கும் ஏற்பட்டுள்ள பாதிப்புக்கு இழப்பீடு வழங்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குறித்தமனுவானது ,சட்டத்தரணி எரந்த வெலியங்கே, சட்டத்தரணி தாரக நாணயக்கார மற்றும் கொதாகொட விவசாயிகள் சங்கத்தின் செயலாளர் திலக் அமரதிவாகர ஆகியோரினால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

முன்னாள் விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே, முன்னாள் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரன, விவசாய அமைச்சின் முன்னாள் செயலாளர் பேராசிரியர் உதித ஜயசிங்க, பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தின தேரர், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் இந்த மனுவின் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

நாட்டின் மக்கள் தொகையில் 28 சதவீதம் பேர் விவசாயத்தை நேரடியாகவும், 42 சதவீதம் பேர் மறைமுகமாகவும் நம்பியிருப்பதாக மனுதாரர்கள் கூறுகின்றனர்.

இலங்கைக்கு இரசாயன உரங்களை இறக்குமதி செய்வதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விதித்த தடை காரணமாக, நாட்டின் விவசாயம் பாரிய பின்னடைவை சந்தித்துள்ளதாக மனுதாரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

சரியான திட்டமிடல் இன்றியும் நிபுணர் ஆலோசனைகள் மற்றும் ஆய்வுகள் இன்றியும் இரசாயன உர இறக்குமதியை தடை செய்ய ஜனாதிபதி நடவடிக்கை எடுத்ததாக அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதித் தேர்தல் – இலங்கை முஸ்லிம்களிடம் ஜம்இய்யதுல் உலமா விடுத்துள்ள வேண்டுகோள்

எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் பின்வரும் வழிகாட்டல்களை கவனத்திற்கொண்டு செயலாற்றுமாறு இலங்கை முஸ்லிம்களிடம் அகில...

பல ரயில் பெட்டிகள் சேவையில் இருந்து நீக்கம்

12 ரயில் பெட்டிகளின் மின் கட்டமைப்பு பாதிக்கப்பட்டுள்ளதால், அவை சேவையிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் சிரேஷ்ட பேச்சாளர்...

ஹிருணிகாவை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவு

நீதிமன்றத்தை அவமதித்தாக தெரிவித்து முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள முறைப்பாடு தொடர்பில் நீதிமன்றம்...