follow the truth

follow the truth

October, 18, 2024
Homeஉள்நாடுபிரதமர் பதவி குறித்து ஜனாதிபதி கருத்து

பிரதமர் பதவி குறித்து ஜனாதிபதி கருத்து

Published on

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை பதவி விலகுமாறு கோரவோ அல்லது பதவி நீக்கம் செய்யவோ அறிவிக்கப்படவில்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிடம் (SLPP) தெரிவித்துள்ளார்.

நேற்றிரவு (28) இடம்பெற்ற ஆளும் கட்சி கூட்டத்தின் போதே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இதனைத் தெரிவித்தார்.

அரசாங்கத்திலோ அல்லது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) கட்சியிலோ பிரச்சினைகளை ஏற்படுத்துவதற்கு தமக்கு எந்த காரணமும் இல்லை எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் நிலவும் தேசிய நெருக்கடியை ஒன்றிணைந்து செயற்படுவதன் மூலம் தீர்க்க வேண்டியது அவசியமானது என தெரிவித்த ஜனாதிபதி, அதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அனைத்து உறுப்பினர்களினதும் ஆதரவு தேவைப்படும் எனவும் தெரிவித்தார்.

கலந்துரையாடலில் கலந்துகொண்ட ஆளும் கட்சி அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இந்த சந்திப்பின் போது பதற்றமான சூழ்நிலையும் காணப்பட்டது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்கள் மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ச ஆகியோர் கலந்துகொண்டனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

HPV தடுப்பூசி செலுத்திய 05 மாணவிகள் வைத்தியசாலையில்

களுத்துறை - அங்குருவத்தோட்ட பகுதியில் HPV தடுப்பூசி செலுத்தப்பட்டதன் பின்னர் சுகவீனமடைந்த 12 வயதுடைய பாடசாலை மாணவிகள் 5...

நாளுக்கு நாள் அதிகரிக்கும் தேங்காய் விலை

தேங்காய் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். சந்தையில் தேங்காய் விலை உயர்ந்துள்ளதுடன், சில பகுதிகளில் ஒரு...

இலஞ்சம் ,ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு 3,045 முறைப்பாடுகள்

இந்த வருடத்தின் செப்டம்பர் மாதம் வரையான காலப்பகுதியில் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு பொதுமக்களிடமிருந்து இதுவரை 3,045...