நாடு தற்போது எதிர்கொண்டிருக்கும் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீளும் வரை நகரங்களுக்கும், அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே எரிவாயு வழங்கப்படும் என முடிவு செய்துள்ளதாக லிட்ரோ நிறுவன அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
தினசரி 80,000 சிலிண்டர்கள் வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது இவ் எண்ணிக்கை 30,000 ஆக குறைந்துள்ளது.
அத்துடன் தற்போது 27 சதவீதமான நுகர்வோர் மட்டுமே எரிவாயுவைப் பயன்படுத்துகிறார்கள்.
மேலும், தற்போதைய நாட்டின் நிலைமையை கருத்தில் கொண்டு, எரிவாயு தேவையை பூர்த்தி செய்ய மாதமொன்றுக்கு 30 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படுகிறது என அவர் தெரிவித்ததுடன், நாட்டை மீளக் கட்டி யெழுப்புவதற்கு அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.