நேற்று இடம்பெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்றக் குழுக் கூட்டத்தில், கடும் வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பு – கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற இந்தக் கூட்டத்தில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரும் பங்கேற்றுள்ளனர்.
தற்போது நிலவும், எரிபொருள், சமையல் எரிவாயு நெருக்கடி உட்பட பொருளாதார பிரச்சினைகள் குறித்து இதன்போது நீண்ட கலந்துரையாடல் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், இடைக்கால அரசாங்கத்தை அமைக்கும் விடயம் தொடர்பில் கருத்து முன்வைக்கப்பட்டபோது, இந்தக் கூட்டத்தில் கடும் வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.