இன்று(27) நள்ளிரவு முதல் ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க சம்மேளன முன்னணி பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளது.
இதன்படி, எதிர்வரும் 24 மணித்தியாலத்திற்கு எவ்வித தபால் சேவைகளையும் முன்னெடுக்காதிருக்க குறித்த முன்னணி தீர்மானித்துள்ளது.
ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தினை பதவி விலகுமாறு நாளைய தினம் முன்னெடுக்கப்படவுள்ள தொழிற்சங்க நடவடிக்கைக்கு ஆதரவிக்கும் வகையில் இந்த பணிப்புறக்கணிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டள்ளது.
இதற்கமைய நாடளாவிய ரீதியில் காணப்படும் 653 தபால் அலுவலகங்கள் மற்றும் 3 ஆயிரத்து 410 உப தபால் அலுவலகங்களின் பணியாளர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக்க தெரிவிக்கப்படுகின்றன.