இலங்கையில் கடல் உணவுகளின் விலை கடுமையாக அதிகரித்துள்ளதனால் ஜூன் மாதத்துக்குள் ஒரு கிலோ கோழி இறைச்சியின் விலை 1,500 ரூபாவாகவும் முட்டை ஒன்றின் விலை 45 ரூபாவாகவும் அதிகரிக்கும் வாய்ப்புக் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை தேசிய கால்நடை சபையின் தலைவர் பேராசிரியர் மஞ்சுள சுமித் தெரிவித்துள்ளார்.
மேலும் கால்நடைகளுக்கான உணவுகளின் விலை உயர்வு மற்றும் இதர செலவுகள் காரணமாக சிறு மற்றும் நடுத்தர கால்நடை உற்பத்தியாளர்கள் அந்தத் உற்பத்தி துறையிலிருந்தும் விலகிச் செல்கின்றதாகவும் அவர் கூறியுள்ளார்.