அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்ட பேரணி கொழும்பு கோட்டையிலிருந்து ஆரம்பமாகியுள்ளது.
கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து காலி முகத்திடலை நோக்கி இவர்கள் பேரணியாகச் செல்ல உள்ளனர்.
எனினும், இந்த போராட்டங்களை தடுப்பதற்கென பொலிஸார் வீதித் தடைகளை அமைத்துள்ளதுடன், கடமையில் இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.