அத்தியாவசியப் பொருட்களின் விலை பாரியளவில் அதிகரித்துள்ள இச்சந்தர்ப்பத்தில் இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை அடுத்த வாரம் முதல் மேலும் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக பால்மா இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
டொலர் நெருக்கடி காரணமாக இறக்குமதியாளர்கள் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். இதனையடுத்து, அடுத்த வாரம் முதல் நாட்டுக்கு வரவிருக்கும் புதிய கையிருப்புக்கள் தொடர்பில் விலை அதிகரிப்பு குறித்து முடிவு செய்யப்படுமென பால்மா இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.