ஒரே நாடு ஒரே சட்டம் என்ற ஜனாதிபதி செயலணியில் அங்கம் வகிக்கும் அனைத்து தமிழ் பேசும் அங்கத்தவர்களும் உடனடியாக பதவி விலக வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் கோரியுள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைத் தெரிவித்திருந்தார்.