சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதலாது பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் கீதா கோபிநாத் வோஷிங்டன் சென்றுள்ள இலங்கை பிரதிநிதிகளை சந்தித்தார்.
இதன்போது, அவர் நிதியமைச்சர் அலி சப்ரி மற்றும் மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்கவுடன் கலந்துரையாடியுள்ளார்.
இலங்கை எதிர்கொள்ளும் கடினமான சவால்கள் மற்றும் தற்போதைய தேவைகள் குறித்து இரு தரப்பினரும் கலந்துரையாடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.