follow the truth

follow the truth

September, 20, 2024
Homeஉள்நாடுஅரசியலமைப்பின் புதிய திருத்தத்திற்கான வரைவு சபாநாயகரிடம் கையளிப்பு

அரசியலமைப்பின் புதிய திருத்தத்திற்கான வரைவு சபாநாயகரிடம் கையளிப்பு

Published on

அரசியலமைப்பின் புதிய திருத்தத்திற்கான முன்மொழிவுகளைக் கொண்ட வரைவு ஐக்கிய மக்கள் சக்தியால் இன்று (21) சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டது.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இதற்கான சட்டமூலத்தை கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவிடம் இன்று காலை எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் வைத்து கையளித்தார். அதன் பின்னர் குறித்த வரைவு சபாநாயகரிடம் ஒப்படைக்கப்பட்டது.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை ஒழிப்பு, கட்டுப்பாடுகள் மற்றும் சமநிலை முறை தொடர்பான முத்தரப்பு அதிகாரப் பகிர்வுக்கான திருத்தம்,20 ஆவது திருத்தத்தை இல்லாதொழித்தல், சுயாதீன ஆணைக்குழுக்களை நிறுவுதல், தேசிய பாதுகாப்பு கவுன்சில் அமைப்பது போன்ற பல ஜனநாயக பண்புகளை குறித்த வரைவு கொண்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தபால் ஊழியர்கள் இருவரின் சேவைகள் இடைநிறுத்தம்

உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் தொடர்பான கடமைகளை புறக்கணித்தமை காரணமாக தபால் ஊழியர்கள் இருவரின் சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த ஊழியர்கள்...

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் அடுத்த வாரம் மீண்டும் திறப்பு

தற்காலிகமாக மூடப்பட்ட ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 24ஆம் திகதி கல்வி நடவடிக்கைகளுக்காக மீண்டும் திறக்கப்படும்...

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை மீண்டும் நடத்தப்படுமா?

இவ்வருடம் நடைபெற்ற 5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் பரீட்சை வினாத்தாள் கசிந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்தால், பரீட்சையை...