நாட்டிற்கு தேவையான எரிபொருளை கொள்வனவு செய்வதற்கு இந்தியா மேலும் 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு வழங்கவுள்ளதாக வௌியுறவுத்துறை அமைச்சர் ஜீ எல் பீரிஸ் தெரிவித்துள்ளார்,
சர்வதேச ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலே வௌியுறவுத்துறை அமைச்சர் ஜீ எல் பிரிஸ் இதனைக் கூறியுள்ளார்,
அத்துடன் பங்களாதேஷுக்கு வழங்க வேண்டிய 450 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலுத்துவதற்கான மேலதிக கால அவகாசம் வழங்க அந்த நாடு இணக்கம் தெரிவித்துள்தாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் சர்வதேச நாணய நிதியத்தின் உதவி தமக்கு கிடைக்கப்பெற 06 மாதகாலங்கள் செல்லும் எனவும் அது பகுதி பகுதியாகவே நாட்டிற்கு கிடைக்கப்பெறும் எனவும் வௌியுறவுத்துறை அமைச்சர் கூறியுள்ளார்,