மேற்கிந்திய தீவுகள் அணியின் சகலத்துறை வீரரான கீரோன் பொல்லார்ட் (Kieron Pollard) சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
34 வயதான பொல்லார்ட் மேற்கிந்திய தீவுகள் அணிக்காக 123 ஒருநாள் மற்றும் 101 இருபதுக்கு 20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.
மேலும் தற்போது ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.