follow the truth

follow the truth

September, 21, 2024
Homeஉள்நாடுரம்புக்கனை சம்பவம் - சம்பந்தப்பட்ட அனைவருக்கும் தண்டனை வழங்கப்பட வேண்டும்

ரம்புக்கனை சம்பவம் – சம்பந்தப்பட்ட அனைவருக்கும் தண்டனை வழங்கப்பட வேண்டும்

Published on

மக்களுக்கு சேவை செய்வதே எமது தலையாய கடமை என்பதை ஒவ்வொரு அரசியல்வாதியும், அதிகாரிகளும் மனதிற்கொள்ள வேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

ரம்புக்கனையில் நேற்று (19) இடம்பெற்ற அசம்பாவித சம்பவம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

“தங்களது எதிர்காலத்துக்காகவும் உரிமைகளுக்காகவும் போராடி உயிர்நீத்த இளைஞருக்கும், பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தையும் வருத்தத்தையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.

பொலிஸாரின் இவ்வாறான காட்டுமிராண்டித்தனமான செயற்பாடுகளை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம். இவை நிறுத்தப்பட வேண்டும். அத்துடன், குறித்த சம்பவத்துடன் சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளும் இதற்குப் பொறுப்புக் கூற வேண்டும்.

குறித்த, மக்கள் ஆர்ப்பாட்டத்தை தடுத்து நிறுத்துவதற்கு பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் குறைந்தபட்ச படையணியினாலேயே ஓர் உயிர் காவுகொள்ளப்பட்டிருக்கின்றது என்றால், அதிகபட்ச படைகளை பயன்படுத்தி இருப்பின் என்ன நேர்ந்திருக்கும்?

ஆகையால், மேற்படி சம்பவத்தின் பின்புலத்தில் அரசியல் சக்திகள் இருந்தால், அதனையும் தீரவிசாரித்து, கண்டறிந்து, சம்பந்தப்பட்ட அனைவருக்கும் உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கின்றேன்” என்று கூறினார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிவு – மூவர் பணி நீக்கம்

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாளை புகைப்படம் எடுத்து வட்ஸ்அப் மூலம் பகிர்ந்த சம்பவம் தொடர்பில் அனுராதபுரம் ரத்மலே...

கொழும்பில் காச நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

மேல் மாகாணத்தில் காச நோயாளர்களின் எண்ணிக்கை 46 சதவீதமாக அதிகரித்துள்ளதாக காசநோய் கட்டுப்பாடு மற்றும் மார்பு நோய்களுக்கான தேசிய...

ரயில் சேவைகளில் மாற்றம் இல்லை

ஜனாதிபதி தேர்தல் வாக்கெடுப்பு இடம்பெறும் நாளைய தினம் ரயில் சேவைகள் வழமைப் போன்று இடம்பெறுமென ரயில்வே பிரதி பொதுமுகாமையாளர்...