அத்தியாவசிய மருந்துகளை பெற்றுக்கொள்வதில் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலை காரணமாக சில மருத்துவமனைகள் திட்டமிடப்பட்ட அவசரமற்ற அறுவை சிகிச்சைகளை ஒத்திவைக்கப்பட உள்ளதாக சுகாதார அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண இன்று (19) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
வைத்தியசாலையில் இல்லாத மருந்துகள் தொடர்பில் சுகாதார அமைச்சர் இன்று பாராளுமன்றத்தில் தெளிவுபடுத்தினார்.
அந்த வகையில் 646 அத்தியாவசிய மருந்துகளில் 37 மருந்துகள் தற்போது கையிருப்பில் இல்லை என அவர் குறிப்பிட்டார்.
அடுத்த மூன்று மாதங்களுக்கு சில மருந்துகளுக்கு பாரியளவில் தட்டுப்பாடு ஏற்படக்கூடும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
இதேவேளை, மருந்து தட்டுப்பாட்டினால் இலங்கை வைத்தியசாலைகளில் மரணங்கள் எதுவும் ஏற்படவில்லை என சுகாதார அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார்.