மேல் மாகாணத்தில் தெரிவு செய்யப்பட்ட சில வைத்தியசாலைகளில் பதிவாகும் மரணங்கள் தொடர்பான மேற்பார்வைகளுக்காக உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்தூவ தெரிவித்தார்.
கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்போர் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் போலியான தகவல்கள் பகிரப்படுவதால், உதவி பொலிஸ் அத்தியட்சகர்களை மேற்பார்வை நடவடிக்கைகளுக்காக நியமித்துள்ளதாக அவர் மேலும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, கொழும்பு தேசிய வைத்தியசாலை, ராகம போதனா வைத்தியசாலை, களுபோவில போதனா வைத்தியசாலை, பாணந்துறை வைத்தியசாலை மற்றும் களுத்துறை வைத்தியசாலை ஆகியவற்றிற்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், தெரிவித்துள்ளார்.