இன்று காலை காலிமுகத்திடலுக்கு அருகாமையில் பொலிஸ் பாரவூர்திகள் பல நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தன.
இவை எங்கிருந்து எதற்காக வந்தன என்பது குறித்து அதிகாரபூர்வமான தகவல் எதுவும் வெளியிடப்படிருக்கவில்லை.
ஆனால், இன்று காலை முதல் சமூக வலைதளங்களில் வெளியாகும் அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் போராட்டக்களத்தில் இன்று வழமைக்கு மாறான நிகழ்வொன்று இடம்பெறவுள்ளதாக தெரிவித்திருந்தன.
எவ்வாறாயினும், தற்போது குறித்த ட்ரக் வண்டிகள் அங்கிருந்து அகற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.