இங்கிலாந்தின் டெஸ்ட் அணித்தலைவர் பதவியிலிருந்து ஜோ ரூட் விலகியுள்ளார்.
31 வயதான அவர் 2017 இல் அலெஸ்டர் குக்கின் பின்னர் அணித்தலைவராக நியமிக்கப்பட்டார்.
மேலும் இங்கிலாந்து அணித்தலைவராக அதிக போட்டிகளுக்கு தலைமை தாங்கியதுடன், அதிக வெற்றிகளைப் பெற்றுகொடுத்த தலைவர் என்ற சாதனையையும் தன்னகத்தே கொண்டுள்ளார்.
எனினும், அவர் தலைமை வகித்த மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடர் தோல்வியில் முடிந்தது.
ஜோ ரூட் 64 டெஸ்ட் போட்டிகளில் வழிநடத்தி, 27 வெற்றிகளையும் 26 தோல்விகளையும் சந்தித்துள்ளார்.