நாடளாவிய ரீதியில் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் தபால் சேவைகளை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மாதாந்த சிகிச்சைகள் ஊடாக மருந்துகளை பெற்றுக்கொள்வோருக்கான தபால் சேவை மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பிரதி தபால்மா அதிபர் துசித ஹுலங்கமுவ தெரிவித்தார்.
தபால்மா அதிபரின் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில் இந்த தீர்மானங்கள் எடுக்கப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், சாதாரண தபால் சேவைகள் முன்னெடுக்கப்படமாட்டாது என பிரதி தபால்மா அதிபர் துசித ஹுலங்கமுவ சுட்டிக்காட்டினார்.