தற்போதைய நெருக்கடியிலிருந்து நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக விசேட மருத்துவ நிபுணர்களின் சங்கம் நான்கு யோசனைகளை அரசாங்கத்திடம் முன்வைத்துள்ளது.
அதற்கமைய விரைவான அரசியல் செயற்பாட்டின் மூலம் நிலையான அரச பொறிமுறையை நிறுவுவது ,அனைத்து அரசியல் கட்சிகளின் கூட்டணியினால் அரசுகளுக்கிடையேயான அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும் என்ற பரிந்துரைகளை மருத்துவர்கள் சங்கம் வலியுறுத்துகிறது.
மேலும் , நிதியமைச்சர் பதவிக்கு ஒரு நாட்டில் பண முகாமைத்துவம் தொடர்பில் விரிவான அறிவுள்ள ஒருவரை நியமிக்க வேண்டும் என விசேட வைத்திய நிபுணர்கள் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.