இன்றைய தினம் 4,353 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 394,353 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, நாட்டில் நேற்றைய தினம் கொவிட் தொற்றால் 194 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 7,560 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.