நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை போக்குவதற்கு புதிய பிரதமரின் கீழ் இடைக்கால அரசாங்கம் அமைக்கப்பட வேண்டுமென முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான கூட்டணி சமர்ப்பித்த 11 முன்மொழிவுகளில் புதிய பிரதமர் பிரேரணையும் அடங்கும்.
இடைக்கால அரசாங்கம் அமைக்கப்படுவதற்கு முன்னர் அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தம் மீண்டும் கொண்டுவரப்பட வேண்டும்” என மைத்திரிபால சிறிசேன மேலும் தெரிவித்தார்.