நாட்டில் உள்ள அனைத்து பொருளாதார மத்திய நிலையங்களும் நாளையும் (24) நாளை மறுதினமும் (25) திறக்கப்படவுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்
பொருளாதார மத்திய நிலையங்களூடாக விற்பனை செய்யப்படும் விவசாய உற்பத்திகளை வீடுகளுக்கு விநியோகிப்பதற்கான விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் விவசாய அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, பொருளாதார மத்திய நிலையங்களை இரண்டு நாட்கள் மாத்திரம் திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.