எரிவாயு விநியோகத் தட்டுப்பாடு காரணமாக நாடு முழுவதும் உள்ள பேக்கரிகள் மூடப்படுகின்றன. உக்ரைன் ரஷ்யா போர் சூழல் மற்றும் சர்வதேச எரிவாயு விநியோகச் சங்கிலியின் சரிவு காரணமாக உலக சந்தையில் எரிவாயு விலை கணிசமான அளவு அதிகரித்து வருகிறது. இவ்வாறான சூழ்நிலையில் நாட்டில் எரிவாயுவிற்கான தட்டுப்பாடு அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக பேக்கரிகள்இ உணவகங்களின் செயற்பாடுகளை தொடர்ந்தும் மேற்கொள்ள முடியாத நிலை காணப்படுகிறது. இதனால் மக்கள் அத்தியவசிய உணவுகள் இன்மை காரணமாக பாரிய சிக்கலுக்கு உள்ளாகியுள்ளனர்.
மேலும் நாட்டில் அந்நிய செலாவணி கையிருப்பு 2.3 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வரையில் வீழ்ச்சியடைந்துள்ளது. இது நாட்டின் அந்நிய செலாவணியின் கையிருப்பில் 70 வீத வீழ்ச்சி நிலையாகும். இதனால் நாடு பாரிய நிதி நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ளது. இதற்கு மத்தியில் மக்களுக்கு தேவையான அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றும் முயற்சிகளை அரசு மேற்கொண்டுவருகின்றது.
இருப்பினும் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேக்கரிகளை மூட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.