இலங்கை துறைமுக அதிகாரசபையின் ஊழியர்களுக்காக கொரோனா இடைநிலை சிகிச்சை முகாம் ஒன்று இன்று பேலியகொடையில் துறைமுகம் மற்றும் கப்பற்துறை அமைச்சர் ரோஹித அபேகுணவர்தனவினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
துறைமுக அதிகாரசபையின் ஊழியர்களுக்கு இரண்டு கொவிட் தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டிருந்தாலும், ஏதோவொரு வகையில் அவர்களுக்கு கொவிட் தொற்று ஏற்பட்டால் சிகிச்சை வழங்க இந்த நிலையம் திறக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
துறைமுக அதிகாரசபையின் மருத்துவ நிலையம் மற்றும் சுகாதார அமைச்சின் அறிவுறுத்தல்களுக்கமைய இந்த நிலையம் அமைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றன.