இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவிற்கும் வௌிவிவகார அமைச்சர் G.L. பீரிஸிற்கும் இடையில் இன்று சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது
இந்த சந்திப்பின் போது, கொவிட் -19 தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதில் இலங்கைக்கு இந்தியா வழங்கிய உதவி மற்றும் ஒத்துழைப்புகளுக்காக வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.
இந்திய கடற்படைக் கப்பல்களைப் பயன்படுத்தி இந்திய கிழக்கு துறைமுகங்களிலிருந்து ஒட்சிசன்களை இலங்கைக்கு விநியோகித்தமைக்காகவும் அமைச்சர், உயர்ஸ்தானிகரிடம் நன்றிகளை தெரிவித்தார்.
இலங்கையில் பெளத்த கலாசாரத் தலங்களைப் பாதுகாப்பதற்கும் ஊக்குவிப்பதற்கும் இந்திய அரசாங்கம் 15 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியதை வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் பாராட்டினார்.
இந்தக் கலந்துரையாடலில் இந்தியா தனது மருந்து உற்பத்தி ஆலைகளை இலங்கையில் அமைப்பது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.