நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்திற்காக குருநாகலில் இருந்து 6 பஸ்களில் ஆட்களை அரசாங்கமே கொண்டு வந்ததாக மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
நேற்றைய தினம் அனுர குமார எம்.பி நாடாளுமன்ற வளாகத்திலிருந்து வெளியேறும் போது அவரது வாகனத்திற்குள் தலைக்கவசம் அணிந்து ஒருவர் உள்நுழைந்தார். இது அனுர எம்.பியின் பாதுகாவலர் என விஜித ஹேரத் எம்.பி சபையில் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், இலக்கத்தகடு அற்ற வாகனத்தில் வந்தவர்களை பற்றி பேசும் விஜித ஹேரத் எம்.பி, அனுர குமாரவின் வாகனத்திற்குள் நுழைந்த நபர் யாரென்பதை கூற மறுப்பதாக ஆளுங்கட்சியின் பிரதான கொறடா அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்தார்.
எனவே, நாடு முழுவதும் இடம்பெற்றுவரும் ஆர்ப்பாட்டங்களுக்கு மக்கள் விடுதலை முன்னணி பின்நிற்பதாகவும் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ குறிப்பிட்டார்.