இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் (Gotabaya Rajapaksa) நெருங்கிய உறவினரான நிருபமா ராஜபக்ஷவும் (Nirupama Rajapaksa) நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
நேற்று (5) இரவு 10.25 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட EK-655 என்ற எமிரேட்ஸ் விமானத்தில் டுபாய் நோக்கிப் புறப்பட்டுள்ளார்.
உலகளவில் பிரமுகர்களால் முறைகேடாக சேமிக்கப்பட்ட சொத்துக்களை பண்டோரா பேப்பர்ஸ் என்ற ஆவணம் அம்பலப்படுத்தியது. இதில், நிருபமா ராஜபக்சவும், அவரது கணவர் குமார் நடேசனும் முறைகேடாக சொத்து சேமித்ததாக ஆவணங்கள் வெளியிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.