முழு சமூகமும் வீழ்ச்சியடைந்துள்ளதோடு, மருந்துகளுக்கு தட்டுப்பாடுகளுக்கு மத்தியில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு சார்பாக சுதந்திர கட்சி இருக்குமென முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நாடாளுமன்றில் தெரிவித்தார்
அவசரகால நிலைமை அமுல்படுத்தியுள்ளதையும் நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் குறிப்பிட்டார்.
20 ஆவது திருத்தத்தை நீக்கி, 19 ஆவது திருத்தத்தை மீண்டும் கொண்டுவர வேண்டும். எனவே, இன்று முதல் நாங்கள் நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்பட தீர்மானித்துள்ளோம். அதன்படி, எங்களுடைய 16 உறுப்பினர்களும் சுயாதீனமாக செயற்படவுள்ளோம்