ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்துடன் எந்தவொரு உடன்பாடுகளுக்கோ அல்லது ஆட்சியமைப்பதற்காகவோ ஐக்கிய மக்கள் சக்தி ஒருபோதும் தயாராக இல்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று (04) ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு தெரிவித்தார்.
ஒரு கணமேனும் தாமதிக்காது உடனடியாக அரசாங்கத்தை வெளியேற்றம் செய்வதே மேற்கொள்ளப்பட வேண்டிய விடயம் என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள், அதனை மேற்கொள்ள ஐக்கிய மக்கள் சக்தி தயாராக உள்ளதாகவும் தெரிவித்தார்.
இதுவேயன்றி ஊழல் மிக்க அரசாங்கத்துடன் டீல் அரசியல் ஐக்கிய மக்கள் சக்தியால் ஒருபோதும் மேற்கொள்ளப்படமாட்டாது என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், சில வக்குரோத்தான குழுக்கள் தவறான கருத்தியலை சமூகமயமாக்கிவருவதாகவும், இத்தகைய நடவடிக்கைகளுக்கு ஐக்கிய மக்கள் சக்தி அடிபனியாது எனவும் தெரிவித்தார்.