மிரிஹான பகுதியில் நடந்த போராட்டத்தின் பொழுது பஸ்ஸுக்கு தீ வைத்த சம்பவத்துடன் தொடர்புடைய இரு சந்தேக நபர்களை அடையாளம் காண பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
குறித்த போராட்டத்தின் பொழுது எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள் மற்றும் ௨ புகைப்படங்களை போலீசார் வெளியிட்டுள்ளனர். அதன் படி சந்தேக நபரை அடையாளம் காண பொதுமக்கள் உதவுமாறு போலீசார் வேண்டுகோள் விடுக்கின்றனர்.