அலுவலக ரயில் சேவைகள் நாளை(04) காலை 6 மணிக்குப் பின்னர் வழமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
பொலிஸ் ஊரடங்கு உத்தரவு நாளை காலை 6 மணிக்கு தளர்த்தப்பட்டதன் பின்னர், புகையிரத ஊழியர்களுக்கு பணிக்குத் திரும்புவதற்காக எவ்விதமான போக்குவரத்து ஏற்பாடுகளும் செய்யப்படாதமை காரணமாக புகையிரத சேவைகளில் தாமதம் ஏற்படலாம் என புகையிரத இயந்திர சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது.