தம்மீது சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டினை அமெரிக்காவுக்கான முன்னாள் இலங்கை தூதுவர் ஜாலிய விக்ரமசூரிய ஏற்றுக்கொண்டுள்ளார்.
2013 இல் அமெரிக்காவில் இலங்கை தூதுவராலயத்திற்கான கட்டிட கொள்வனவின் போது 332,027 டொலர்களை அபகரிக்க முயற்சித்ததாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது . கொலம்பியா மாவட்ட நீதிமன்றில் குறித்த வழக்கு விசாரணைக்குட்படுத்தப்பட்ட நிலையில், குற்றத்தினை அவர் ஏற்றுக்கொண்டுள்ளார்.
கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் கடந்த 2014 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் ஜாலிய விக்ரமசூரிய அமெரிக்காவுக்கான இலங்கை தூதுவராக கடமையாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.