எதிர்வரும் திங்கட்கிழமை முதல், முன்கூட்டிய பாடசாலைகளுக்கு விடுமுறையை அறிவிக்குமாறு கல்வி அமைச்சுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால், இந்தப் பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
நீண்ட மின் தடை காரணமாக பாடசாலை மாணவர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளமையினால் இவ்வாறு பரிந்துரை முன்வைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.