மிரிஹான பகுதியில் ஜனாதிபதி கோட்டாபயவின் வீட்டின் முன் நேற்றிரவு இடம்பெற்ற சம்பவத்தில் அரசியல்வாதிகளின் தலையீடுகளும் காணப்படுவதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க குற்றஞ்சாட்டியுள்ளார்.
இன்று இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
குறித்த எதிர்ப்பு நடவடிக்கை கடும்போக்குவாதிகளின் செயற்பாடு என சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
ஆர்ப்பாட்டம் செய்வதற்கான உரிமை தொடர்பில் எவ்வித சிக்கலும் இல்லை எனவும் அதற்கு அராஜகமான முறையில் ஈடுபடுவது முறையான விடயம் இல்லை என அவர் குறிப்பிட்டார்.
இவ்வாறான சம்பவங்களால் நாடு மேலும் பின்னடைவை எதிர்நோக்கக்கூடும் என சுற்றுலாத்துறை அமைச்சர் தெரிவித்தார்.