இலங்கை கிரிக்கெட் அணி எதிர்வரும் மே மாதம் பங்களாதேஷிற்கான சுற்றுப்பயணத்தில் கலந்து கொள்ளவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த சுற்றுப்பயணத்தின் போது, இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் இரண்டு டெஸ்ட் போட்டிகள் திட்டமிடப்பட்டுள்ளன.
ஐசிசி உலகக் டெஸ்ட் சாம்பின்ஷிப் போட்டித் தொடரின் கீழ் இடம்பெறும் இப் போட்டித் தொடரின் முதல் போட்டி மே 15 ஆம் திகதி முதல் 19 திகதி வரை Chattogram இல் நடைபெறுகிறது.
அதன் இரண்டாவது போட்டி டாக்காவில் மே 23 முதல் 27 வரை நடைபெற உள்ளது.