மரண தண்டணை விதிக்கப்பட்டிருந்த பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
2015 ஆம் ஆண்டில் இரத்தினபுாியில் இடம்பெற்ற கூட்டமொன்றின்போது, துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர உள்ளிட்ட மூவருக்கு இரத்தினபுாி மேல் நீதிமன்றினால் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.