தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ருவன் சமில பிரசன்ன என்றழைக்கப்படும் தெமட்டகொட ருவானுக்கு பிணை வழங்குவது மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களை கைது செய்வதை தடுக்கும் நோக்கில் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
இதற்காக பல்வேறு நபர்களின் பெயர்களைப் பயன்படுத்தி இரண்டு சிவிலியன்களினால் 15 மில்லியன் ரூபா பெறப்பட்டதாகவும், குறித்த பிரிவிலுள்ள சார்ஜன்ட் ஒருவருடன் குறித்த இருவரும் தொடர்புகளை பேணி வருவதாகவும் தெமட்டகொட சமிந்தவின் மகன் தெரிவித்திருந்தார்.
இந்த விடயம் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினரும் மோசடி இடம்பெற்றுள்ளதா என்பது தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை, பணம் பெற்றதாக கூறப்படும் நபர்களுடன் அவருக்கு தொடர்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பில் பொலிஸ் உத்தியோகத்தர் இடமாற்றம் செய்யப்பட்டு முதற்கட்ட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
மேலும், பெறப்பட்ட பணம் அரச சட்ட உத்தியோகத்தர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும், இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் அவ்வாறான சம்பவம் எதுவும் வெளியாகவில்லை என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.