இந்திய கடன் வசதி எல்லையின் கீழ், இலங்கைக்கு டீசல் கிடைக்கும் வரை லங்கா ஐஓசியிடமிருந்து 6,000 மெட்ரிக் டன் டீசலைக் கொள்வனவு செய்ய தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
வலுசக்தி அமைச்சர் காமினி லொக்குகே இதனை தெரிவித்துள்ளார்.
அதற்கமைய மின் உற்பத்தி உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளுக்கு உரிய டீசல் கையிருப்பு பயன்படுத்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.