follow the truth

follow the truth

September, 20, 2024
Homeஉள்நாடுமுன்னாள் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு இடைக்காலத் தடை

முன்னாள் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு இடைக்காலத் தடை

Published on

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அவர் தங்கியிருந்த உத்தியோகபூர்வ இல்லத்தை தொடர்ச்சியாக பயன்படுத்த அனுமதித்தமை தொடர்பில் எடுக்கப்பட்ட அமைச்சரவை தீர்மானத்திற்கு உயர் நீதிமன்றத்தினால் இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு 07, மஹகமசேகர மாவத்தை (பெஜெட் வீதி) வீட்டை அவருக்கு தொடர்ச்சியாக பயன்படுத்த அனுமதி வழங்கியமை தொடர்பில் தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு எடுத்துள்ள நீதிமன்றம் இம்முடிவை அறிவித்துள்ளது.

இன்றையதினம் (29) உயர் நீதிமன்ற நீதியரசர்களான ப்ரீத்தி பத்மன் சூரசேன, யசந்த கோதாகொட, மஹிந்த சமயவர்தன ஆகிய மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டிருந்தது.

அதற்கமைய முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஒரு மாத கால அவகாசத்தின் அடிப்படையில் குறித்த இடைக்காலத் தடை அமுல்படுத்தப்படுவதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வாக்கு பெட்டிகள், வாக்குச் சீட்டுகள் விநியோகிக்கும் பணிகள் நாளை ஆரம்பம்

வாக்கு பெட்டிகள், வாக்குச் சீட்டு உள்ளிட்ட தேர்தலுக்கான சகல ஆவணங்களையும் விநியோகிக்கும் பணிகள் நாளை காலை முதல் ஆரம்பிக்கப்படும்...

உத்தியோகபூர்வமற்ற முடிவுகளை வெளியிடுவதை தவிர்க்குமாறு கோரிக்கை

ஜனாதிபதி தேர்தலின் உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகும் வரை உத்தியோகபூர்வமற்ற முடிவுகளை வெளியிடுவதை தவிர்க்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆனந்த...

ஜனாதிபதித் தேர்தல் – பாதுகாப்பிற்காக முப்படைகளும் இணக்கம்

ஜனாதிபதித் தேர்தலின் போது அமுல்படுத்தப்பட வேண்டிய இறுதி பாதுகாப்பு வேலைத்திட்டம் பொலிஸ்மா அதிபர்களுக்கு இன்று (19) வழங்கப்பட்டதாக பொது...