சிங்கராஜ வனப்பகுதியிலிருந்து பெறுமதியான தாவரங்கள் மற்றும் உயிரினங்களை வெளிநாடுகளுக்கு கடத்த முயற்சித்த வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மாத்தறை − தெனியாய − விஹாரஹேன குருளுகல பிரதேசத்தில் வைத்து இந்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஜேர்மனி நாட்டைச் சேர்ந்த இருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சிங்கராஜ வனாந்தரத்தின் குருளுகல பிரதேசத்தில் வனத்தில் வைத்து இவரை அழைத்துச்சென்ற சுற்றுலா வழிகாட்டி இருக்கும் போது வெளிநாட்டவர்கள் இருவரும் ஓனான் ஒன்றை பார்த்துக்கொண்டு இருந்துள்ளனர்.
அதன்பின்னர், மற்றுமொரு வெளிநாட்டவருக்கு, குறித்த சுற்றுலா வழிகாட்டியை வேறொரு திசைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
அதன்பின்னர், அந்த இடத்தில் வந்து பார்க்கும் போது ஓணானை காணவில்லை என சுற்றுலா வழிகாட்டி தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, சந்தேகம் அடைந்த வழிகாட்டி, குறித்த வெளிநாட்டவர்களிடம் இது குறித்து வினவியுள்ளார்.
அதன்பின்னர், வெளிநாட்டவர்கள் பிடித்த ஒணானை இவரிடம் காட்டி யாரிடமும் சொல்லவேண்டாம் என பணம் கொடுத்துள்ளனர்.
குறித்த வழிகாட்டி, பணத்தை வாங்க மறுத்துவிட்டு உடனே சம்பவம் குறித்து உரிய அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளார்.
பின்னர் அவ்விடத்திற்கு சிங்கராஜ வனாந்திரத்திற்கு பொறுப்பான இறக்குவானை வனஜீவராசி பாதுகாப்பு அதிகாரிகளும், வன பாதுகாப்பு தெபார்த்து மென்துவ அதிகாரிகளும், மிரிச வனஜீவராசிகள் பாதுகாப்பு அதிகாரிகளும், தெனியாய பொலிஸ் நிலைய அதிகாரிகளும், சிங்கராஜ வனாந்திரத்தை பாதுகாக்கும் சமூக சங்கமும் இணைந்து இவர்கள் தங்கியிருந்த சுற்றுலா விடுதியை முற்றுகையிட்டனர்.
தங்கல்ல பிரதேசத்தில் இருந்து பிடித்து உயிருடன் பொதி செய்யப்பட்ட தவளைகள், நண்டு, சிலந்தி, எரும்புகள், கரப்பான், மூலிகை விதைகள், சிற்பிகள், கடல் கரை தாவரங்கள் விசேடமான வன பிரதேசத்தின் உயிரினங்களை பிடிப்பதற்காக பயன்படுத்தும் பச்சை நிறமுடைய வலைகள் அதற்காக பயன்படுத்தும் பல வர்ண வெளிச்சத்தைக் கொண்ட டோச் லயிட் ,தொலைபேசிகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட வெளிநாட்டவர்கள் இருவரும் மொறவக்க நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.