தனியார் பேருந்து சாரதிகள் மற்றும் நடத்துநர்களுக்கான அரசாங்கம் அடையாள அட்டையொன்றை வழங்க வேண்டும் என அகில இலங்கை தனியார் பேருந்து பொது ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.
தற்போதைய சூழ்நிலையில் தமது தொழில்சார் அடையாளங்களை சரிபார்க்க முடியாமல் தனியார் பேருந்து நடத்துநர்கள் கடும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளதாக அதன் செயலாளர் குமார ரத்ன ரேணுக தெரிவித்துள்ளார்