நாட்டில் நேற்று(20) இரவு முதல் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், குறித்த காலப்பகுதியில் மக்கள் செயற்பட வேண்டிய விதம் குறித்து வழிகாட்டல்களை சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது.
இதற்கமைய நீதிமன்றங்கள்,சுகாதார சேவை, பாதுகாப்பு தரப்பினர், விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுவோர், அத்தியாவசிய பொருட்களை விநியோகத்தில் நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களுக்கு இந்த காலப்பகுதியில் அனுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர பொலிஸ், கிராம சேவகர்கள் மற்றும் அத்தியாவசிய பணிக்குழாமினர் அடங்களாக உள்ளூராட்சி மன்றங்கள் முன்னெடுத்து செல்ல முடியும் என சுகாதார அமைச்சின் வழிகாட்டலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்தியாவசிய பொருட்களை விநியோகிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதோடு சில்லரை பொருட்கள் மற்றும் வெதுப்பக உற்பத்தி பொருட்களை விநியோகிப்பதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு விடுத்துள்ள வழிகாட்டலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, சகல வழிபாட்டுஸ்தலங்கள், கூட்டங்கள், சிற்றுண்டிச்சாலைகள், உணவகங்கள், வாராந்த சந்தைகள், மேலதிக வகுப்புகள் என்பவற்றை தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுலில் உள்ள காலப்பகுதியில் முன்னெடுக்க முடியாதென தெரிவிக்கப்பட்டுள்ளது.