நேற்று முதல் அமுல்படுத்தப்பட்டுள்ள நாடு தழுவிய முடக்கநிலையின் காரணமாக, குறித்த காலப்பகுதியில் அவசரமான அல்லது உண்மையான தேவைகளையுடையவர்களுக்கு தனது சேவைகளை வெளிநாட்டு அமைச்சின் கொன்சியூலர் விவகாரங்கள் பிரிவு வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, கொழும்பில் உள்ள செலிங்கோ கட்டிடத்தில் அமைந்துள்ள கொன்சியூலர் விவகாரங்கள் பிரிவு முடக்கநிலை காலப்பகுதியில் மூடப்பட்டிருப்பதுடன், வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களின் இறப்பு மற்றும் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் தொடர்புடைய சான்றிதழ்கள் தொடர்பான கொன்சியூலர் சேவைகளை மட்டும் கட்டாயமான முன் நியமன அடிப்படையில் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களின் இறப்பு விடயங்கள் தொடர்பான சேவைகளை பிராந்திய கொன்சியூலர் அலுவலகங்கள் வழங்கும்.
அதன்படி, ௦11 2335942, 011 2338812 அல்லது மின்னஞ்சல் consular@mfa.gov.lk ஊடாக முன்நியமனங்களைப் பதிவு செய்வதற்கு கொன்சியூலர் அலுவல்கள் பிரிவை தொடர்பு கொள்ள முடியும்