நாட்டில் நேற்று(20) இரவு 10 மணி முதல் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைபடுத்தல் ஊரடங்கு உத்தரவு காரணமாக பேலியகொடை மெனிங் சந்தையில் நுகர்வோர் இன்மையினால் பாரியளவு மரக்கறிகள் தேங்கியுள்ளதாக மெனிங் சந்தையின் வர்த்தக மற்றும் ஒன்றிணைந்த பொருளாதார மத்திய நிலைய சங்கத்தின் பொருளாளர் நிமல் அத்தனாயக்க தெரிவித்துள்ளார்.
இதன்படி, சுமார் 15 லட்சம் கிலோகிராம் மரக்கறிகள் அங்கு சேர்ந்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.