தடை செய்யப்பட்ட கண்டம்விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் ஏவுகணையை, 2017ம் ஆண்டுக்குப் பிறகு முதல்முறையாக வடகொரியா சோதனை செய்ததாக, தென் கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் தெரிவித்துள்ளன.
இந்த ஏவுகணை 1,100 கி.மீ. தூரம் சென்று (684 மைல்கள்) ஒரு மணிநேரத்தில் ஜப்பான் கடலில் விழுந்ததாக ஜப்பான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அணு ஆயுதங்களை தாங்கி செல்லும் நோக்கில் வடிவமைக்கப்பட்ட இந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள், அமெரிக்கா வரை சென்று தாக்கும் திறன் கொண்டவை.
வடகொரியாவின் இந்த சோதனைக்கு அதன் அண்டை நாடுகள் மற்றும் அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது