follow the truth

follow the truth

November, 16, 2024
Homeஉள்நாடுரயில் கட்டண அதிகரிப்பு இடைநிறுத்தம்

ரயில் கட்டண அதிகரிப்பு இடைநிறுத்தம்

Published on

ரயில் ஆசன முன்பதிவுக் கட்டண அதிகரிப்பு உடன் அமுலாகும் வகையில் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

சில நகரங்களுக்கிடையிலான ரயில் கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படக் கூடும் எனினும், கட்டணத் திருத்தம் தொடர்பில் இணக்கப்பாடு இன்னும் எட்டப்படவில்லை என அமைச்சர் தெரிவித்தார்.

ரயில் கட்டண அதிகரிப்புக்கு இதுவரை இணக்கம் தெரிவிக்காத நிலையில் குறித்த கட்டண அதிகரிப்பு ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் அமுனுகம தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், புதிய ரயில் கட்டணங்கள் தொடர்பில் இன்று இரவு இடம்பெறவுள்ள கலந்துரையாடலை தொடர்ந்து எதிர்வரும் திங்கட்கிழமை முதல் ரயில் கட்டணத்தில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்படலாமென அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வெளிநாட்டில் வசிப்பவர்கள் பிறப்பு, திருமணம் மற்றும் இறப்பு சான்றிதழ்களின் நகல்களைப் பெற புதிய வழி

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களின் வசதிக்காக வெளிநாடுகளில் உள்ள இலங்கை தூதரகங்களில் இருந்து பிறப்பு, திருமணம் மற்றும் இறப்பு சான்றிதழ்களின்...

ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து கடனுதவி பெற இலங்கைக்கு அனுமதி

இலங்கைக்கு 50 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி இணக்கம் தெரிவித்துள்ளது. இது இலங்கையில் நடைமுறைப்படுத்தப்படும்...

முர்து பெர்னாண்டோவை பிரதம நீதியரசராக நியமிக்க அரசியலமைப்பு சபை அங்கீகாரம்

நாட்டின் பிரதம நீதியரசராக திருமதி முர்து பெர்னாண்டோவை நியமிப்பதற்கான பரிந்துரையை அரசியலமைப்பு சபை அங்கீகரித்துள்ளது. நாட்டின் பதில் பிரதம நீதியரசராக...