கடந்த 21 ஆம் திகதி 132 பேருடன் பயணித்த சீனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் MU5735 விமானம் குவாங்சி மாகாணத்தில் விபத்துக்குள்ளான நிலையில், 24 மணிநேரத்தைக் கடந்து தேடுதல் பணிகள் நடைபெற்று வருகின்றன.
ஆயினும் இதுவரை யாரும் உயிருடன் மீட்கப்படவில்லை என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், விபத்துக்கு உள்ளான விமானத்தின் கருப்புப் பெட்டியை தேடுதல் குழுவினர் கண்டறிந்துள்ளதாக, அரசு ஊடக அறிக்கை தெரிவித்துள்ளது.
விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை குறித்து இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.