இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான டிப்போக்கள் ஊடாக வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் செல்லும் பஸ்களுக்கு, அவசர தேவைகளில் ஒன்றாகக் கருதி எரிபொருள் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் போக்குவரத்து அமைச்சு இலங்கை போக்குவரத்து சபையின் தலைவருக்கு அறிவித்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, சிரமங்களுக்கு உள்ளான சுற்றுலா பஸ்களுக்கு டிப்போக்களின் ஊடாக எரிபொருள் வழங்குமாறு சுற்றுலாத்துறை அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது. வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் செல்லும் சுற்றுலா பஸ்களுக்கு மாத்திரமே இந்த எரிபொருள் வழங்கப்படுகிறது.
அதன்படி, மீதொட்டமுல்ல, ஜா-எல, அனுராதபுரம், கண்டி, தம்புள்ளை, நுவரெலியா மற்றும் அம்பாந்தோட்டை ஆகிய டிப்போக்கள் ஊடாக சுற்றுலா பஸ்களுக்கு எரிபொருள் நிரப்பும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. குறித்த பஸ்களுக்கான எரிபொருளை வழங்கும்போது அந்த சந்தர்ப்பத்திலேயே அதற்கான பணத்தை பெற்றுக்கொள்ளுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் செல்லும் பஸ்களுக்கு எரிபொருள் வழங்க தீர்மானம்
Published on